Tuesday, April 14, 2009

சின்ன சிறு கிளியே......


கன்ன குழியினிலே கண்ணம்மா .........
என் மெய்பொருள் தெரியுதடி கண்ணம்மா ..

உன் தத்து நடையினிலே ,
இந்த உலகமே கொட்டி கிடக்குதடி.....

என்னென்று சொல்லுவேனடி ,
உன் இதழ் சிந்தும் புன்னகையை ...
மாதுளை முத்துக்கள் உதிரும் உன்னதம் சொல்லுவதோ,

இல்லை ,மயக்கும் மந்திரம் என்பதுவோ.....

பிரம்மன் ஆனந்த தாண்டவம் கொண்டானோ ,
உன் ஜனன தினத்தினிலே....
பூ கொல்லை கொணர்ந்து உன் பூ முகம் செய்தானோ ....
இல்லை மேகம் நிறம் கடன் பெற்று ,

உன் வர்ணம் கொடுத்தானோ ..


கண்ணே!

உன் கை குழைத்த சோற்றினிலே புது அமுதம் கிடைக்குதடி ,

உன்னை கையில் ஏந்துகையில் சுகந்த இன்பம் தோணுதடி


கண்மணியே !

இயற்கை தேவதையே உன்னைதான் சுற்றி வருகுதடி...

நீ என் வயிற்றில் பிறவாமையால் ,
உன் தாய்மேல்,

என் மனம் பொறாமை கொள்ளுதடி

இந்த ஜென்மம் பனித்ததடி ,

என் வாழ்வில் நீ வந்தமையால் .....
உந்தன் ஒரு முத்தம் போதுமடி ...

இனி என் வாழ் நாள் ஜனிக்குமடி கண்ணம்மா ,

என் வாழ்வும் இனிக்குமடி....


Tuesday, April 7, 2009

புரியா நட்பு...........


கனா காணும் பெண்ணே ,
நினைவினில் வா ...
உன்னுயிரும் என் உயிரும் சேர்ந்தால்,
வினா தோன்றும் முன்னே ..
ஏன் என்று கேட்டால் நட்பென்று சொல்வேன் ..

Sunday, April 5, 2009

அந்தி வேளையிலே ......


நிலவின் உதய வேளையில் .....
என் நினைவின் வெள்ளோட்டத்தில் ....

கால்களின் செயற்கை நடையில் ....
சிவந்த வானம் நோக்கி கண்கள் துழாவின....

ஆஹா என்ன வான்மகளின் அழகு ,
அந்த வெவ்வாடையில் செந்நிற பொட்டில் ..
கொள்ளை அழகு!..


ஆனால் இன்னும் சிறு நொடிகளில் ,
அவளுக்கு விதவை கோலம் ....
தினமும் அவளுக்கு வர்ணஜால விழாதான்....
அவ்வப்போது வானவில்லும் போர்வை போர்த்தி விட்டு போகும் ...

தினமும் முத்த மழை பொழியும் தென்றல் நாயகனும்
அவளுக்கு சளைத்தவள் அல்ல என் மனம் வருடி செல்வதில் ...

கவலை திவலைகள் மனதை வருடி கொண்டிருந்த,

அந்தஅந்தி வேளையில்,

அந்த அணைப்பு என்றும் சுகமே ....


இயற்கை அன்னையின் விந்தையை எப்படி தான் வியப்பது ...

என்னை துயில் எழுப்பி இரவு தாலாட்டு பாடும் வரை

எத்தனை பரிமாணங்கள் அவளுக்கு .....


என்ன இருந்தாலும் சூரியன் துளி கொள்ளும் ,

இந்நேரம் தான் என் கவிதை துளிகளுக்கு நன்னேரம் ...


இப்பொழுதுகள் இப்படியே இருந்துவிட கூடாதா ....

காலை நேர அன்னையின் கூவல் ஒலி இல்லை....

பின்,

அவசர ஓடல்கள் இல்லை ,

அலுவல் அழுத்தங்கள் இல்லை,


அமைதி,

எங்கும் அமைதி எதிலும் அமைதி ....

சிறிது நேர மாலை தழுவல்கள் ,

என்னை சிறு நேர சிரஞ்சீவியாக ஆக்கி விடுகிறது ...


என் நண்பர்களை , தாயை , தலைவனை

இந்நேர இடுக்குகளில் கண்டுவிடுகிறேன் ..


வாழ் நாள் பொழுதுகளில் இப்பொழுது மட்டும்

என் நினைவு அகராதியில் நிறுத்தி விட நினைக்கிறேன் ...

கால தேவன் கை கொடுப்பானா ?.....

காத்திருக்கிறேன் !....








Thursday, April 2, 2009

நினைவின் நினைவுகள் ....





விடியா பொழுதுகளில்
விடிய காத்திருக்கும் வேளையில் .....

வித்திட்டு போக விதிமகள் வந்தாள்,
கால தேவனின் விளையாட்டில்
உருண்டோடி போன நான் ,
மனம் பிடிக்க வந்தவனின் கை பிடிக்க போனேன்,
வாசல் வரை வந்தவன் காணாமல் போனான் !
இப்படி புள்ளி கோலங்களில் தொலைந்து விட்ட நான்...

காதல் காவலில் சிக்கிக்கொண்டு விட்டேன்.!
கனவுகளை கட்டிக்கொண்டு நடை போட கற்று கொண்டேன் ...

இதோ இன்று என்னையே நான் தேடுகிறேன்
நான் தொலைத்து விட்ட உன்னில்....
பட்டாம்பூச்சியின் சிறகின் வண்ணமாய் பறந்து கொண்டிருக்கிறேன் ...
நாளை பொழுது நலமாய் வருமென .....










நண்பனுக்காக!......




நினைவுகளில் தத்தளிக்கும் நண்பனே !
நயமாய் வினவினால் விடைகளும் விளையாடாய் வந்திடும்,

கண்களில் வலை போட்டால் ,
கானல்
நீரில் மீன் கிட்டுமா ?
நினைவினால்
தூண்டில் போட்டு ,
உனக்கான
நிஜத்திற்காக காத்திரு ,
தருணங்கள் தளர்ந்து போனாலும்.,
நிழழும்
உன்னை விட்டு பிரிந்தாலும்.,
நீ
மட்டும் நம்பிக்கை பிடித்து நீ நீயாயிரு ..
நின்னையே
நீ உணர்வை....
நல்
வினையோடு நீ சேர்வாய் ....
!