
நிலவின் உதய வேளையில் .....
என் நினைவின் வெள்ளோட்டத்தில் ....
கால்களின் செயற்கை நடையில் ....
சிவந்த வானம் நோக்கி கண்கள் துழாவின....
ஆஹா என்ன வான்மகளின் அழகு ,
அந்த வெவ்வாடையில் செந்நிற பொட்டில் ..
கொள்ளை அழகு!..
ஆனால் இன்னும் சிறு நொடிகளில் ,
அவளுக்கு விதவை கோலம் ....
தினமும் அவளுக்கு வர்ணஜால விழாதான்....
அவ்வப்போது வானவில்லும் போர்வை போர்த்தி விட்டு போகும் ...
தினமும் முத்த மழை பொழியும் தென்றல் நாயகனும்
அவளுக்கு சளைத்தவள் அல்ல என் மனம் வருடி செல்வதில் ...
கவலை திவலைகள் மனதை வருடி கொண்டிருந்த,
அந்தஅந்தி வேளையில்,
அந்த அணைப்பு என்றும் சுகமே ....
இயற்கை அன்னையின் விந்தையை எப்படி தான் வியப்பது ...
என்னை துயில் எழுப்பி இரவு தாலாட்டு பாடும் வரை
எத்தனை பரிமாணங்கள் அவளுக்கு .....
என்ன இருந்தாலும் சூரியன் துளி கொள்ளும் ,
இந்நேரம் தான் என் கவிதை துளிகளுக்கு நன்னேரம் ...
இப்பொழுதுகள் இப்படியே இருந்துவிட கூடாதா ....
காலை நேர அன்னையின் கூவல் ஒலி இல்லை....
பின்,
அவசர ஓடல்கள் இல்லை ,
அலுவல் அழுத்தங்கள் இல்லை,
அமைதி,
எங்கும் அமைதி எதிலும் அமைதி ....
சிறிது நேர மாலை தழுவல்கள் ,
என்னை சிறு நேர சிரஞ்சீவியாக ஆக்கி விடுகிறது ...
என் நண்பர்களை , தாயை , தலைவனை
இந்நேர இடுக்குகளில் கண்டுவிடுகிறேன் ..
வாழ் நாள் பொழுதுகளில் இப்பொழுது மட்டும்
என் நினைவு அகராதியில் நிறுத்தி விட நினைக்கிறேன் ...
கால தேவன் கை கொடுப்பானா ?.....
காத்திருக்கிறேன் !....
ஒரு சில இடங்களில்.. சொல் செட்டு நன்றாக இருக்கிறது..
ReplyDeleteஞாயிற்றுக் கிழமையின்..ஒரு மாலைநேர அனுபவம் போல தோழிக்கு..!
( உங்கள் கவிதைகளில்..காலத் தேவனின் வருகை அடிக்கடி வருகிறது...)