
விடியா பொழுதுகளில்
விடிய காத்திருக்கும் வேளையில் .....
வித்திட்டு போக விதிமகள் வந்தாள்,
கால தேவனின் விளையாட்டில்
உருண்டோடி போன நான் ,
மனம் பிடிக்க வந்தவனின் கை பிடிக்க போனேன்,
வாசல் வரை வந்தவன் காணாமல் போனான் !
இப்படி புள்ளி கோலங்களில் தொலைந்து விட்ட நான்...
காதல் காவலில் சிக்கிக்கொண்டு விட்டேன்.!
கனவுகளை கட்டிக்கொண்டு நடை போட கற்று கொண்டேன் ...
இதோ இன்று என்னையே நான் தேடுகிறேன்
நான் தொலைத்து விட்ட உன்னில்....
பட்டாம்பூச்சியின் சிறகின் வண்ணமாய் பறந்து கொண்டிருக்கிறேன் ...
நாளை பொழுது நலமாய் வருமென .....
அழகான கவிதை....நல்ல முயற்சி கார்த்திகா...... நிறைய எழுதுங்கள்......பட்டாம்பூச்சியின் சிறகின் வண்ணமாய் பறந்து கொண்டிருக்கும்..... உங்கள் கற்பனைகளும் ரெக்கை கட்டி பறக்கட்டும்..... வாழ்த்துக்கள்.....
ReplyDelete(இப்படி புள்ளி கோலங்களில் தொலைந்து விட்ட நான்...)
ReplyDeleteஒரு காதல் கவிதைக்கான..
ஈர்ப்பை.. இந்த வரிகள்..தனக்குள் வளைத்து வைத்திருக்கிறது..கார்த்திகா..
இப்படி மொத்த கவிதைக்கான சூட்சமங்களை...சீக்கிரம் நீங்கள் கைவரப் பெற மனதார வாழ்த்துகிறேன்..