
நினைவுகளில் தத்தளிக்கும் நண்பனே !
நயமாய் வினவினால் விடைகளும் விளையாடாய் வந்திடும்,
கண்களில் வலை போட்டால் ,
கானல் நீரில் மீன் கிட்டுமா ?
நினைவினால் தூண்டில் போட்டு ,
உனக்கான நிஜத்திற்காக காத்திரு ,
தருணங்கள் தளர்ந்து போனாலும்.,
நிழழும் உன்னை விட்டு பிரிந்தாலும்.,
நீ மட்டும் நம்பிக்கை பிடித்து நீ நீயாயிரு ..
நின்னையே நீ உணர்வை....
நல் வினையோடு நீ சேர்வாய் .... !
கண்களில் வலை போட்டால் ,
ReplyDeleteகானல் நீரில் மீன் கிட்டுமா ?
மிக அழகான வரிகள்.......
(தருணங்கள் தளர்ந்து போனாலும்.,
ReplyDeleteநிழழும் உன்னை விட்டு பிரிந்தாலும் )
ஒரு நண்பனுக்கான நம்பிக்கையை கவிதை இந்த இடத்தில்.. அழுத்தமாய் பதிவு செய்கிறது..
கானல் நீருக்கான மீனை..கண்கள் நெய்யும் வலையால் பிடிக்கும் வாய்ப்பு யதார்த்தத்தில் இல்லை.. ஆனால் உங்கள் உவமை அந்த மீன்களை கச்சிதமாகப் பிடித்துக் கொண்டது..!
தங்கள் க(விதை)கள் மிக அருமை. மூன்று கவியும்
ReplyDeleteமுக்கனியின் சாறு.!முத்தமிழின் பேரு!
இளைய கவியே! கம்பனிடம் கற்றாயோ?
என் பாரதி இடம் பயின்றாயோ
வாழ்க நின் தமிழ் வளர்க உன் கவி!