
கன்ன குழியினிலே கண்ணம்மா .........
என் மெய்பொருள் தெரியுதடி கண்ணம்மா ..
உன் தத்து நடையினிலே ,
இந்த உலகமே கொட்டி கிடக்குதடி.....
என்னென்று சொல்லுவேனடி ,
உன் இதழ் சிந்தும் புன்னகையை ...
மாதுளை முத்துக்கள் உதிரும் உன்னதம் சொல்லுவதோ,
இல்லை ,மயக்கும் மந்திரம் என்பதுவோ.....
பிரம்மன் ஆனந்த தாண்டவம் கொண்டானோ ,
உன் ஜனன தினத்தினிலே....
பூ கொல்லை கொணர்ந்து உன் பூ முகம் செய்தானோ ....
இல்லை மேகம் நிறம் கடன் பெற்று ,
உன் வர்ணம் கொடுத்தானோ ..
கண்ணே!
உன் கை குழைத்த சோற்றினிலே புது அமுதம் கிடைக்குதடி ,
உன்னை கையில் ஏந்துகையில் சுகந்த இன்பம் தோணுதடி
கண்மணியே !
இயற்கை தேவதையே உன்னைதான் சுற்றி வருகுதடி...
நீ என் வயிற்றில் பிறவாமையால் ,
உன் தாய்மேல்,
என் மனம் பொறாமை கொள்ளுதடி
இந்த ஜென்மம் பனித்ததடி ,
என் வாழ்வில் நீ வந்தமையால் .....
உந்தன் ஒரு முத்தம் போதுமடி ...
இனி என் வாழ் நாள் ஜனிக்குமடி கண்ணம்மா ,
என் வாழ்வும் இனிக்குமடி....